புனித
கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் ஜுன் மாதம் 20
ஆம் தேதி உகந்தமலை குமண பூங்கா நுழைவாயிலில் திறக்கப்படும். யூலை 4 ஆம்
தேதி அப்
பாதை மீண்டும் அடைக்கப்படும்.
பாதை
திறத்தல் மற்றும் அடைத்தல் தொடர்பான திகதிகள் (22) வியாழக்கிழமை
மொனராகலை அரசாங்க அதிபரின் தலைமையில் கதிர்காம ஆலயத்தில் இடம் பெற்ற
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
இது
தற்போது உறுதிப்படுத்தப்பட்ட திகதிகள் ஆகும். எனினும் அடுத்த வாரம் உகந்தை
மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக
அபேவிக்ரம தலைமையில் இடம்பெற இருக்கும் கதிர்காம நிர்வாகத்தினருடனான
கலந்துரையாடலில் பாதயாத்திரீகர்களுக்கு சாதகமாக பாதை திறத்தல் மற்றும்
அடைத்தல் தொடர்பில் சில திருத்தங்களும் இடம்பெறலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை
யாத்திரை மேற்கொள்ளுகின்ற அடியவர்கள் யாத்திரையின் போது உக்காத பொருட்களான
பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றை கொண்டு செல்வதை
முற்றாக தடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது .
இவ்
வருட கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் மாதம் 26 ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி யூலை மாதம் 11 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன்
நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours