பாறுக் ஷிஹான்
சுகாதார அமைச்சினால் அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 19.05.2025 தேசிய டெங்குவாரத்தை முன்னிட்டு 3 நாட்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வழிகாட்டலின் கீழ் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதாரப் பிரிவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ்.எப்.இஸட்.சராப்டீன் தலைமையில் இந்த டெங்கு பரிசோதனைகள் வீடுகள் வடிகான்கள் பொது இடங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன
டெங்குகுடம்பிகள் இனங்கானப்பட்ட வீடுகளின் உரிமை யாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.மேலும் இதன்போது வீடுகள், பாடசாலைகள், உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையிலும் பொதுச்சுகாதார பரிசோதரர்கள் சுற்றாடல் பிரிவின் போலீஸ் அதிகாரிகள் இராணுவத்தினர் என பலரும் இப் பரிசோதனை செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours