இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.கொத்மலையின் கரண்டி எல்ல பகுதியிலலுள்ள பள்ளத்தாக்கில் இன்று(11) காலை பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours