நூருல் ஹுதா உமர்

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராகவும்,பிரதித் தவிசாளராகவும் முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த  எஸ்.எச்.எம்.அஸ்பர், எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை  நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர்  மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.  

தவிசாளருக்கான நியமன கடிதத்தை அவர்  ஷாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பருக்கு  கட்சித் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் முன்னிலையில் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் புதன்கிழமை (14) மாலை கையளித்தார்.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைத் தவிர, தனிக்கட்சியாக 50 சதவீதத்தை கடந்து  இந்த உள்ளூராட்சி சபையைக் கைப்பற்றியுள்ள கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours