சா.நடனசபேசன்
ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டமான ஐக்சன் யுனிற்றி லங்கா (AU Lank)நிறுவனத்துடன் இணைந்து தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் சூறலா கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கல்முனையில் அமைந்துள்ள சிறிகரன் தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அலுவலக கட்டடத்தில் 14 ஆம் திகதி புதன்கிழமை அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெபிரகாஷ் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ் சிறப்பதிதிகளாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு கல்முனை தமிழ்பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எல். சஞ்ஜீவன் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் கல்முனை கற்றன் நசனல் வங்கி முகாமையாளர் என்.அரவிந்தன் மற்றும் கௌரவ அதிதியாக ஐக்சன் யுனிற்றி லங்கா கிழக்கு மாகாண தலைமை நிர்வாக அதிகாரி கே.கஜேந்திரன் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிருவாக உறுப்பினர்கள். ஐக்சன் யுனிற்றி லங்கா நிருவாக உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours