(க.விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் இன்று சனிக்கிழமை(17)பிற்பகல் 1.56 மணியளவில்  வீசிய மினிசூறாவளி காரணமாக 2 வீடுகள் சேதமைந்துள்ளதாக போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.


ஒரு வீட்டின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததினால் அங்கிருந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
இதன்போது வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்களும்,உடமைகளும் சேதமடைந்துள்ளன.
இதேபோன்றுஅப்பகுதியில் மேலும் இரண்டு வீடுகள் மரம் முறிந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு அதன் ஊடாக பிரதேச செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது சம்பந்தமான சேதவிபரங்களை அறிக்கையிட்டு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை மாலைநேரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுழல்காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours