நூருல் ஹுதா உமர்

சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்  போட்டியொன்றில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையில் மூன்றாம் ஆண்டு, விசேட தரத்தில் கல்வி பயிலும் எம்.எவ். செய்னப் என்ற மாணவிக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட சமூகத்தினால் விசேட வரவேற்பு மற்றும் கௌரவம் வழங்கிய நிகழ்வு பீடத்தின் கேட்போர் அரங்கில் 2025.05.26 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்து கொண்டு குறித்த மாணவியை பாராட்டி உரையாற்றியதுடன் கௌரவத்தையும் வழங்கினார். கடந்த 2025.05.24 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக மர்ஹூம் ஏ.ஆர்.எம். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற 3ஆது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தார்.

அவர் மூத்தோர் கட்டா (Senior Kata Female Level 1) பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் குமிதே (Senior Kumite Female) பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

நிகழ்வின்போது பீடத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள்  சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

செய்னப்பின் இந்த சாதனை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் ஊக்கமும் உந்தலும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது..



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours