( வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில் பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தேர்தலுக்கு முன்பும் தேர்தல் காலத்திலும் அளித்த வாக்குறுதிகள் தற்போது படிப்படியாக நிறைவேற ஆரம்பித்துள்ளன.

தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலத்திற்கு பிறகு நேற்று முன்தினம் ஆலயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

விநாயகபுரம் 3 பெரியதம்பிரான் ஆலயத்தில் முன் மண்டபம் அமைத்து தருவேன் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அதுபோல உமிரி காயத்ரி ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கான வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டது 

இரண்டுக்குமான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தவிசாளராகத் தெரிவான சுயேட்சை குழுத்தலைவரான சு. சசிகுமார் தனது ஏனைய உறுப்பினர்களுடன் சென்று இந் நிகழ்வுகளில் பங்கேற்றார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours