எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளகமும் இணைந்து வெருகல் பிரதேச இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ஆன்மிக பயிற்சிப் பாசறையானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
பாடசாலை மாணவர்களிடைய சிறந்த ஆன்மிக ஒழுக்க பண்புகளை மேம்படுத்துவதற்கும் நற்பண்புகளுடைய பிரஜைகளை உருவாக்குவதற்கு அறநெறி பாடசாலைகள் பாரிய அளவிலான சேவையை வழங்கி வருகின்றது.
இதன் போது அறநெறி மாணவர்களுக்கு சிறந்த ஒழுக்க விழுமியன் தொடர்பாக கருத்துக்கள் தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன், வெருகல் பிரதேச செயலாளர் எம்.எம். அனாஸ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தனன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம். குணரட்ணம் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours