.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய பராஒலிம்பிக் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான
மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு தங்கப்பதக்கங்களை சுபிகரித்தது.
2025 ஆம் ஆண்டிற்கான
பராமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் கோமாகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் 17, 18 திகதிகளில் இடம்பெற்ற போட்டிகளில் மட்டக்களப்பைச் சேர்ந்த குளோரியன் ஹேமேந்திரா தேசிய ரீதியில் இரு தங்கப்பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இருபது வயதிற்குற்பட்ட குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி இரு தங்கப்பதக்கங்களை சுபகரித்துள்ளார்.
கடந்த 2022, 2024 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டெறிதல் டோட்டிகளில் தங்க பதக்கத்தை பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
சிறு வயது முதல் விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்தி வரும் செல்வன் குளோரியன் ஹேமேந்திரா நீச்சல், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருவதுடன் விளையாட்டுத்துறையில் பல்வேறு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours