(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு தேசிய கல்வியக்கல்லூரிக்கு நிரந்தரமான பீடாதிபதியாக த.கணேசரெத்தினம் கல்வி அமைச்சின் செயலாளரும்,ஆசிரியர் கல்வித்துறைக்கு பொறுப்பான பிரதம ஆணையாளருமான எஸ்.எஸ்.ஹெட்டியாராச்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை (16)நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு நிரந்தர பீடாதிபதியாக நியமனம் பெற்ற மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரெத்தினம் தனது கடமைகளை திங்கட்கிழமை (19)காலை கையொப்பம் இட்டு தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இவரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேசிய கல்வியக்கல்லூரியில் இடம்பெற்றபோது பீடாதிபதி த.கணேசரெத்தினத்தை விரிவுரையாளர்கள்,மற்றும் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார்கள்.
இவர் அட்டாளைச்சேனை தேசிய கல்வியக்கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றிவிட்டு 2019ஆண்டு மட்டக்களப்பு தேசிய கல்வியக் கல்லூரிக்கு கொவிட்-19 காலத்தில் இடம்மாற்றம் பெற்று வந்து பதில் பீடாதிபதியாக 2025.5.15 திகதி வரையும் கடமையாற்றி வந்துள்ளார். அக்கரைப்பற்று பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவு
Post A Comment:
0 comments so far,add yours