( வி.ரி. சகாதேவராஜா)

அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக நேற்று  (28) புதன்கிழமை) இடம்பெற்றது. 

 திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா .உதயகுமார் தலைமையில்  தமிழ்மொழித்தின பண்பாட்டு ஊர்வலத்துடன்  ஆரம்பமாகியது.
 
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உள்ளிட்ட அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

 பின்னர் தேசிய மற்றும் வலயக்கொடிகள் ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது   அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் மாணவிகளின் வரவேற்பு நடனமும் தமிழ் தாய்வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்து தமிழ் மொழி தின வாழ்த்து என்பன இடம்பெற்றது.

 திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட  பாடசாலைகளின் மாணவர்களின் பங்குபற்றலுடன்  இடம்பெற்றது.

 2024 ஆண்டில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது..   

மேலும் இதில் பங்கு பற்றி வெற்றி பெற்று மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வலயக்கல்விப்பணிப்பாளரினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours