க.விஜயரெத்தினம்
நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்ற பணி பகிஸ்கரிப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்களில் கடமையாற்றும் தபால் ஊழியர்கள் இன்றையதினம்(29) தபாலகங்களை மூடி அடையாள போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடிக்கிடப்பதை காணக்கூடியதாகவுள்ளது.காலை முதல் மூடப்பட்டிருக்கும் தபாலகங்கள் செய்தி எழுதும் வரை திறக்கப்படாததால் பலர் வந்து சேவையைப் பெறாமல் தங்களின் வீடுகளுக்கு திரும்பிப்போவதை எம்மால் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதால் தபாலகத்தை நாடிவருகின்ற பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியீட்டார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி,பெரியபோரதீவு, தபாலகங்கள் பூட்டப்பட்டிருப்பதை காணலாம்.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபாலகத்தில் கடமயாற்றும் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தபாலக ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Post A Comment:
0 comments so far,add yours