பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நினைவேந்தல் பிரார்த்தனையும் சங்கத்தின் மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இன்று நடைபெற்றது.

சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களின் பங்கேற்புடன்  இந்நிகழ்வு  திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு  முன்பாக இடம்பெற்றது

சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில்  சங்கத்தின் ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவனும் கலந்து கொண்டிருந்தார்.மேலும் விசேட  பூசை வழிபாடு இடம் பெற்ற பின்னர் முள்ளிவாய்க்கால் தொடர்பான  துண்டுப்பிரசுரங்கள்    பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
 
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் உள்ள கஞ்சி காய்ச்சப்பட்டு சிரட்டை ஊடாக மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்று முதலாவது இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம் தேதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர்.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வைப்பதற்கான அரிசியினை ஒவ்வொரு கடையாகச் சென்று புடி அரசி பெற்று சேமித்தே காய்ச்சியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours