( வி.ரி. சகாதேவராஜா)
 சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிரந்தரமாக கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்ட காரணமாக இம் மாதம் முதல் அங்கேயே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டது.

சம்மாந்துறை வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பல சிரமங்களுக்கு மத்தியில் கணக்காளர் சீ.திருப்பிரகாசம்  நியமிக்கப்பட்டதனால்  மே  மாதத்திற்கான சம்பளம் முதல் முதலாக   நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையூடாகவே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் தர்மலிங்கம் பிரபாசங்கர் 
 இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் குறிப்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கணக்காளர் அலுவலக உத்தியோகத்தர்கள் . வலயக்கல்விப் பணிப்பாளர்- சம்மாந்துறை அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours