(பாறுக் ஷிஹான்)

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும்   நடைமுறைப்படுத்தப்பட்ட     வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை  மாவட்ட  மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான  நுவரகல செனவெவ அருகில்  இன்று   மங்களகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  டீ.எம்.எஸ்.கே தசநாயக்க   தலைமையில்  மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி நெறிப்படுத்தலில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். ஏ.கே பண்டார  உட்பட மங்களகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரகல  வன  பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் காட்டு வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும்  பயன்பெறக்கூடிய வகையிலும் இத் திட்டம்  முன்னெக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 100க்கும்   மேற்பட்ட மரக்கன்றுகள்   நடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 அம்பாறை மாவட்டத்தில்  மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நுவரகல வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனமாகவும்  யானைகள்  நடமாட்டம் அதிகம் உள்ள வனமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours