எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில்
மாபெரும் விவசாய கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்ட விவசாய
திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்)
எம்.பரமேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு
மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். திசநாயக்க கலந்து
கொண்டு சிறப்பித்தார்.
சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள
மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று (04) இடம் பெற்ற கண்காட்சியில்
நவீன தொழில் நுட்பத்துடன் காலநிலைக்கு சாதகமான பாதுகாப்பு கூடாரத்தில்
பயிர்ச் செய்கை தொகுதி,
நகர்ப்புற மாடித்தோட்ட பயிர்ச் செய்கை தொகுதி,
மரக்கறி, இலைமரக்கறி, கிழங்கு பயிர்கள், மூலிகை தாவரங்கள், பந்தல்களில் பயிர்ச் செய்கை தொகுதி,பண்ணை பெண்கள் விரிவாக்கல் தொகுதி
காளான்
செய்கை மற்றும் தேனீ வளர்ப்புத் தொகுதி, நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி
நிறுவனம் - பத்தலகொட, கிழக்கு பல்கலைக் கழகம், பண்ணை இயந்திரமயமாக்கல்
பிரிவு மகா இலுபள்ளம மற்றும் பல நிறுவனங்களது காட்சி கூடாரங்களை அமைத்து
காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் கால் நடை உற்பத்தி மற்றும்
சுகாதாரம், தெங்கு, பனை அபிவிருத்திச் சபைகள், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்
மற்றும் பல திணைக்களங்களதும், தனியார் நிறுவனங்களதும் காட்சி கூடாரங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
பெருத்திரலான மாணவர்கள் மற்றும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours