(எம்.எஸ்.எம்.ஸாகிர் ,பாறுக் ஷிஹான்.நூருல் ஹுதா உமர் 

“போதையற்ற மருதூர்” எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நேற்று (04) புதன்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

சர்வேதச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு என்பன சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடாகும்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி ஆகியோர் விசேட அதிதிகளாகவும், சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா, சமூக அபிவிருத்தி  உதவியாளர் யூ.எல்.ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் சாய்ந்தமருது சமுதாய அமைப்புக்களின் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வளவாளர்களாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்-ஷய்க் எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி), கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளவள வைத்தியர் யூ.எல்.சாறாப்தீன்ன், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாடுச் சபையின் வட கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.வி.எம் றசாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விஷேட அம்சமாக போதைப்பொருட்கள் எவ்வாறு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றது, அவர்கள் எவ்வாறு இப்பழக்கத்திற்கு உள்ளாகுறார்கள் என்பதை உணர்த்தும் குறுந்திரைப்படத்தினை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஏ.எப்.றிகாஸா ஷர்பீனால் தயாரித்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours