மண்முனை தென்  எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை பொதுமயானம் மற்றும் சின்னத்தீவு மயானம் என்பனவற்றை சிரமதானம் மூலம் துப்பரவுசெய்யும் பணி மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சு.இளமாறன் மற்றும் துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டிலும் பிரதேசசபையின் ஒத்துழைப்புடனும் 28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

பிரதேசசபை உறுப்பினர் சு.இளமாறன் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதானச் செயற்பாட்டிற்கு பிரதேசசபையினால் ஜே.சி.பி வாகனம் வழங்கப்பட்டு அதன்மூலம் சிரமதானம் இடம்பெற்றதுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துந்துகொண்டனர். இதன் ஆரம்பநிகழ்வுக்கு மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் பிரதித்தவிசாளர் அ.வசிகரன் கலந்து சிறப்பித்தனர்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours