( வி.ரி.சகாதேவராஜா)
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"
எனும்
நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1
மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான வீட்டிற்கான அடிக்கல் நடும்
நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நேற்று
முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் திருக்கோவில் பிரதேச
ஒருங்கிணைப்புகுழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்துகொண்டு
வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.
மேலும்
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா
உஷாந், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமைத்துவ
தொழிநுட்ப அதிகாரி பாஹிம், தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச சபை
உறுப்பினர் .பா.சுதாகரன்,கிராம சேவை உத்தியோகத்தர்கள்,பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர.
Post A Comment:
0 comments so far,add yours