(வி.ரி. சகாதேவராஜா)

 இவ்வருட பாதயாத்திரை எவ்வித பிரச்சினையும் விக்கினமுமின்றி நடைபெற குமுக்கன் காளிகாதேவிக்கு சித்தர்கள் குரல் அமைப்பினர் விசேட வனபோஜன பூஜையை நடாத்தினர்.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் நேற்று அங்கு சென்ற குழுவினர் இவ் வன போஜன விசேட பூஜையை நடாத்தியதோடு காளிகாம்பாள் சிலைக்கு பாதுகாப்பு மேல் பந்தலையும் அமைத்தனர்.

 சித்தர்கள் குரல் அமைப்பின் நமசிவாய சுவாமிகள், வரதகணேஷ் அண்ணா, விவே, கஸ்தூரன், நவநீதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

செல்லும் வழியில் காட்டுப் பாதை வெள்ளமின்றி பயணத்திற்கு உகந்ததாக  காணப்படுவதாக ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தெரிவித்தார்.
இவ்வருட பாதயாத்திரை எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours