(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கமு / கமு எம்.எஸ். காரியப்பர் பாடசாலையில் டெங்கு நுளம்பை
ஒழித்து, சுத்தமான உலகையும் சுகமான
வாழ்வையும் பெற்றிட பாடசாலை மாணவ,
மாணவியர், அதிபர், பிரதி அதிபர்கள்,
ஆசிரிய, ஆசிரியைகள், சிற்றூழியர்கள், பாடசாலை சமூகம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) போன்றோர்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்
பேரணி ஒன்றை இன்று (16)  திங்கட்கிழமை ஏற்பாடு செய்தனர்.

இதில் டெங்கு நுளம்பின்  பாதிப்பு, டெங்கின்
உருவாக்கம், அவற்றை அழித்தலும் தவறும் பட்சத்தில் அவற்றுக்கான தண்டனைகள் பற்றியும், மக்களின் ஒத்துழைப்புப் 
பற்றியும் கவனம் ஈர்க்க பேரணியொன்று பாடசாலை வளாகத்திலிருந்து
ஏற்பாடு செய்யப்பட்டு, வீதிகளினூடாக வலம்வந்து அயல் சமூகத்தவர்களுக்கு
டெங்கு பற்றி விழிப்புணர்வும்
ஏற்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours