பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் 900 Million  நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக 'நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை' எனும் தொனிப்பொருளிற்கமைய தோழர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் சிந்தனையில் இன்று (05) உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது விவசாயம் கால்நடை காணி நீர்ப்பாசனம் அமைச்சர்  கே.டி லால்காந்த , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்  வசந்த பியதிஸ்ஸ , அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயவிக்ரம, அம்பாறை மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சங்கத்தினர்கள், அம்பாறை மாவட்ட விவசாயிகள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

காலநிலை மாற்றம் மற்றும் ஒழுங்கற்று மனித செயற்பாடுகள் காரணமாக கல்லோயா ஆற்றின் பள்ளத்தாக்குகளில் சிறு மழை பொழிந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது இதனால் மாவட்ட விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து விளைச்சலிலும் குறைவினை ஏற்படுத்தியுள்ளதோடு இவ் இழப்பினை ஈடு செய்ய ஆண்டுதோறும் பெரும் செலவு ஏற்படுகிறது எனவே இவ்வாறான  நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக அரசாங்கம் ஆனது கல்லோயா மறுசீரமைத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









--

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours