எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு  பிரதேச செயலகப்பிரிவில்   விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (03) இடம் பெற்றது.


மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்  ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடை பவனியில் மண்முனை மேற்கு  பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி,
மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.கோபாலப்பிள்ளை பங்குபற்றுதலுடன் நடைபெற்றன.

வவுணதீவு இலங்கை வங்கிக்கிளையின் முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியானது, வவுணதீவு உழவர் சந்தியை அடைந்து அங்கு மட்/மமே/கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களால் 'பிளாத்திக்கு மாசுபாட்டை முறியடிப்போம்' எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம்  அரங்கேற்றப்பட்டது.


மேலும் மட் /மமே/வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தை அடைந்து அங்கு மர நடுகை நிகழ்வுகளுடன் தேசிய  கீதம் மற்றும் சுற்றாடல்  கீதம் இசைக்கப்பட்டு சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்ட மாணவர்களினால் 'பூமியை பசுமையாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் நாடகமும்,  பல்வேறு கவிதைகளும் அரங்கேறின.

உலக சுற்றாடல் தினம் எதிர்வரும் 05 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல் போன்ற விழிப்புணர்வு  செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலிற்கு அமைவாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்


 இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு எஸ்.கோகுலன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி.தே.உதயாகரன், திரு.சா.சஜீவன், கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.ஷாஹீட்,   மண்முனை மேற்கு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.காயத்திரி சிறிவித்தியன், வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி திரு.கே.பி. விஜயந்த, வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் வி.ரமேஷ்குமார்  உள்ளிட்ட உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours