( வி.ரி.சகாதேவரிஜா)
கிழக்கு
மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில்
உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டார்.
காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் மேனன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றியவராவார்.
Post A Comment:
0 comments so far,add yours