நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025/2026 ஆம் கல்வியாண்டில் ஆங்கில டிப்ளோமா  கற்கையில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி  ஏ.எம்.எம். நவாஸ் நெறிப்படுத்தலில்  இடம்பெற்றது.

ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வின்போது கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், DELT திணைக்களத்தின் தலைவர், கலாநிதி எம்.ஐ. பௌசுல் கரீமா, சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர் ஆகியோர் உரையாற்றினர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 25 வருடங்களுக்கு மேலாக ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியின் நடத்தி வருவதாகவும் அதனூடாக பல நூறு மாணவர்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வின்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ,எம். சமீம் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். அப்துல் றஹ்மான் மற்றும் விரிவுரையாளர் இசட். ஹுறுள் பிர்தொஸ், ஆங்கில மொழி போதனாசிரியர் எம்.எச்.எம். அல் இஹ்ஸான் உள்ளிட்டவர்களுடன் கற்கை நெறியை தொடரவுள்ள மாணவர்களும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours