க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலய ஆசிரியை திருமதி.பரமேஸ்வரி சகாதேவராசா 37 வருடங்கள் காத்திரமான கல்விபணியாற்றி எதிர்வரும் 1.7.2025. ஓய்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு தரம் இரண்டு வகுப்பு மாணவர்களும்,பெற்றோர்களும் கூட்டாக இணைந்து ஆசிரியைக்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வை இன்றையதினம் (23)அதிபர் து.குகப்பிரியன் தலைமையில் ஒழுங்கு செய்து நடாத்தினார்கள். நிகழ்வில் மாணவர்கள் பாராட்டுப்பத்திரம்,பரிசுப்பொதிகளை வழங்குவதை படத்தில் காணலாம்.இந்நிகழ்வில் பெற்றோர்களான திருமதி.சர்மிளா சந்திரசேகரம்,தரணிக்கா ராஜேஸ்வரன்,டனுசியா ஜோண்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours