( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவில்
பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை
மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது.
நடைபெற்ற
தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்
முன்மொழியப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எம். எம்.
முஷர்ரப் ஏகமானதாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உப
தவிசாளர் பதவிக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.மாபிர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்நத டீ.சுபோகரன் ஆகியோரின் பெயர்கள்
முன்மொழியப்பட்டன. வாக்கெடுப்பில் டீ.சுபோகரன் 3 வாக்குகளையும், ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.மாபிர் ஆதரவாக 13 வாக்குகளைப் பெற்று
சபையில் ஏகமனதாக உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.





Post A Comment:
0 comments so far,add yours