(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னங்குடா கிராமத்தில் இன்று ( 02.06.2025) பிற்பகல் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்இணைப்பு - குடிநீர் பிரச்சனை காரணமாக இருவருக்கிடையில் இடம் பெற்ற வாக்குவாதத்தில் துப்பாக்கிதாரி தன்னிடம் இருந்த உள்ளூர் தயாரிப்பான கட்டு துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours