எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) திகதி காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.ஏம்.அஸ்மி தலைமையில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் அவர்களின் ஏற்பாட்டில் சபை ஒன்று கூடி மாநகர சபை முதல்வராக போட்டிகள் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே வேளை குறித்த சபைக்கு பிரதி முதல்வராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர வைரமுத்து தினேஸ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், ஞா.ஸ்ரீநேசன் இரா.சாணக்கியன் ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் இன்.றைய தெரிவு இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours