( வி.ரி.சகாதேவராஜா)
விஞ்ஞான
ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 4 வது திறன் வகுப்பறை
பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று (17)
செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கிராம
புற மாணவ செல்வங்களையும் நவீன தொழில்நுட்ப சாதனங்களினூடாக கற்றல்
கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் விஞ்ஞான
ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 4வது திறன் வகுப்பறை திறப்பு
விழா பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர்
கே.கமலராஜன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இத்
திறன் வகுப்பறைக்கான நிதியுதவி அமரர். கலாநிதி வல்லிபுரம் குமாரசுவாமி
நினைவாக அவரது குடும்பத்தினரால்(அமெரிக்கா) மனித நேயம் அமைப்பின்
ஒருங்கிணைப்பில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின்
நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
நிகழ்வில்
விசேட அதிதிகளாக பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.உதயகுமார் மற்றும்
பாடசாலைக்கான இணைப்பாளர் கே. குலேந்திரேஸ்வரன், கௌரவ அதிதிகளாக விஞ்ஞான
ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் இணைப்பாளர் வ.யதுர்ஷன்,
தலைவர் தி.கோபிநாத், செயலாளர் ரா.ஜனுசன், பொருளாளர் ம.திலக்சன் ஆகியோரும்,
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும்
பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின்
ஸ்தாபகரும் இணைப்பாளருமான யதுர்ஷன் மற்றும் தலைவர் கோபிநாத் ஆகியோருக்கு
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் மனித நேயம் அமைப்பின் இச் சேவையை
பாராட்டி ஒரு நினைவுச் சின்னமும் மற்றும் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை
அமைப்பின் இச் சேவையை பாராட்டி ஒரு நினைவுச் சின்னமும் பாடசாலை
சமூகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன
Post A Comment:
0 comments so far,add yours