எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் புத்திக்க ஹேவவசம் அவர்களின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (18) திகதி இடம் பெற்றது.
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயளால பிரிவில் உள்ள தனித்துவமான சுற்றுலாத்தலங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சமூக மட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் உள்ளூர் மட்ட விமான சேவைகளை மீள் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலானது இடம் பெறள்ளது.
மேலும் சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக இதன் போது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுத்தன் (காணி) பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரி.நிர்மலன், வி.நவநீதன், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், கிழக்குமாகண சுற்று பணியகத்தின் பணிப்பாளர் சுரேஸ் ரொபர்ட் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours