(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாண சபையின் இவ்வாண்டுக்கான பிஎஸ்ஜிஎஸ் நிதி ஒதுக்கீட்டினை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆளுநரின் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி, சுகாதார, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் எனப் பலரும் கலந்து கொண்டன
Post A Comment:
0 comments so far,add yours