( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரு துருவங்கள் நேற்று ஒன்றிணைந்தன.
பொத்துவில்
பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட
உறுப்பினருமான அப்துல் வாசித் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷர்ரப் ஆகியோரே இவ்வாறு மக்கள் நலன்
கருதி ஒன்றிணைந்தனர்.
அவர்களுக்கிடையிலான
இந்த வரலாற்று ரீதியான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று (26) மு.கா.
கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இடம்
பெற்றது.
அச்சமயம்
உலமாக்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரதித் தலைவருமான
எம். ஐ .எம் .மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் உயர்பீட
உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.
அவர்களது இணைவின் பலனாக நேற்று சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷர்ரப் இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச சபை தவிசாளரானார்.
முன்னாள் தவிசாளர் வாஸித் மு.கா.பாராளுமன்ற உறுப்பினராகிறார்.
இதனால் பொத்துவில் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours