( வி.ரி. சகாதேவராஜா)
 " பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


"கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் காரைதீவு கடற்கரை பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி முதல் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் மற்றும் 
பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும்  சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours