( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம்
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம்
பாதயாத்திரீகர்கள் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை 32வது நாளில் குறுமண்வெளி
- மண்டூர் படகுப் பாதையூடாக வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் கந்தசுவாமி
ஆலயத்தை சென்றடைந்தனர்.
.
யாழ்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட
ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 32தினங்களில் யாழ்ப்பாணம்
கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களைக் கடந்து
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
மழை
வெயிலுக்கு மத்தியில் சுமார் 78 அடியார்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு காய்ச்சல் தடிமன் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெயில்
கொடூரம் காரணமாக கால்கள் கொப்பளித்துமுள்ளது.
இன்று திங்கட்கிழமை பெரிய கல்லாறு கடலாச்சி அம்மன் ஆலயத்தை சென்றடைவார்கள்.கல்முனையில் இரவு தங்குவார்கள்.
நாளை செவ்வாய்க்கிழமை 03 ஆம் தேதி காரைதீவை சென்றடைவார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours