( வி.ரி. சகாதேவராஜா)

யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த  பாதயாத்திரை குழுவில்  ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார்.

புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர்.

கடந்த மே மாதம் 01 ஆம் தேதி உடப்பிலிருந்து  யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிக்கு வந்து 56 நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர் என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

அவர்  பாதயாத்திரை செல்வது மூன்றாவது தடவை ஆகும்.

இம்முறை கதிர்காமத்தை வந்தடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பஸ்ஸில் கதிர்காமம் வந்தனர்.

நேற்று 11 மணியளவில் குடும்பத்தினர் சகிதம் கதிர்காமம் ஆலயத்துக்குள் பிரவேசித்த பொழுது திடீரென சரிந்து விழுந்தார்.

 மறுகணம் அவரை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர் .
 அங்கே அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது.
தற்போது அவரது பிரேதம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அங்கு அவரது பிரதேச பரிசோதனையின் பின் அவரது பூதவுடல் உடப்பிற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது என்று பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours