(அஸ்லம் எஸ்.மெளலானா)
கட்சி முடிவுக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக்கிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி அவர்களினால் இன்று சனிக்கிழமை (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடைய கட்சி அங்கத்துவம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் அறிவித்துள்ளார்.
இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவி தொடர்பில் சுயேட்சைக் குழு உறுப்பினரான கே.எல். சமீம் அவர்களுடன் கட்சி ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டிற்கு மாறாக தானும் அப்பதவிக்குப் போட்டியிட்டு, கட்சித் தீர்மானத்தை நசீர் முகம்மது ஆசிக் மீறிச் செயற்பட்டிருந்தார் என்று முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி குறிப்பிட்டுள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours