நூருல் ஹுதா உமர்

காரைதீவு சபை புதிய தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் புதிய உப தவிசாளர் முஹமட் ஹனிபா முஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பதவியேற்பு வைபவம் காரைதீவு பிரதேச சபையில் இன்று (27) காலை சுபவேளையில் பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் வை.கோபிநாந்த், என்.எம்.றணீஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏ.ஆர்.எம். ஹில்மி, ஏ.பர்ஹாம், பிரதேச சபை செயலாளர்  உட்பட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பதவியேற்பு வைபவம் முடிவுற்றதும் தவிசாளர் அறையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours