காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்திற்கான கிரியாரம்பம் இன்று 28 ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றது.
மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் யூலை மாதம் 02 ஆம் புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.
அதேவேளை யூலை 01 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை முதல் எண்ணைய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
மறுநாள்
02 ஆம் திகதி புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் காலை 9 மணியளவில் கிழக்கின்
பிரபல சிவாச்சாரியார் சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்
தலைமையில் நடைபெறும்.
ஆலய பூசகர் க.பாஸ்கரன் உதவியுடன் இடம் பெறும் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக திருவிழா இடம்பெறும்.
யூலை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்காபிஷேகம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலய பரிபாலன சபையினர் இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
Post A Comment:
0 comments so far,add yours