சா.நடனசபேசன்



மட்டக்களப்பு தேசியக்கல்விக் கல்லூரியில் 2003/2005 கல்வியாண்டின் ஆசிரிய மாணவர்களது  சங்கமம் நிகழ்வு தாளங்குடாத் தேசிய கல்விக்கல்லூரியில் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தயாளசீலன் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்விக்கல்லூரியில் கற்று கல்விப்புலத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் பலர் சுமார் இரண்டு தசாப்தத்திற்குப் பிறகு இச்சங்கமம் நிகழ்வுக்காக  இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்டிருந்தனர்.


இந்நிகழ்வுக்கு அதிதிகளாக தாளங்குடா கல்விக்கல்லூரியின் பீடாதிபதி  ரி.கணேசரெட்ணம் உபபீடாதிபதி திருமதி வி.மணிவண்ணன் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரி பீடாதிபதி ஜனாப் .எம்.சி.ஜூனைட்;  மற்றும் 2003/2005 காலப்பகுதியில் கற்பித்து ஓய்வுபெற்றுள்ள  விரிவுரையாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.சிறிநேசன் ஓய்வுபெற்ற முன்னாள் பீடாதிபதிகளான கே.புண்ணியமூர்த்தி கே.துரைராஜசிங்கம்  வி.குகதாசன் கலாநிதி எம்..பி.ரவிச்சந்திரா .ரி.ஏரம்பமூர்த்தி ஆர் .இராஜரெட்ணம் அமுதா நாகலிங்கம் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன் இவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரிய மாணவர்களது அனுபவப்பகிர்வு மற்றும் கலைநிகழ்வுகளுடன் சங்கமம் நிகழ்வுகள் நிறைவுபெற்றதுடன் அடுத்ததடவை நடைபெறவுள்ள சங்கமம் நிகழ்வு வடபகுதியில் நடாத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















































































Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours