( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை
பிரதேச சபையின் கன்னி அமர்வு நேற்று (15) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை
பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சபா மண்டபத்தில்
நடைபெற்றது.
தவிசாளர் மாஹிரின் கன்னி உரையில்..
இவ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில்
சபைக்கான
வருமானம் 58 மில்லியன் ரூபாய்.ஆனால் செலவு.76 மில்லியன் ரூபாய் .அதில்
அமைய ஊழியர்களுக்கு 28 மில்லியன் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.
எனவே சபை வருமானத்தை அதிகரிக்க அனைவரும் கவனமெடுக்கவேண்டும்.
அமைய அடிப்படையில் பணியாற்றும் எமது ஊழியர்களுக்கு மாதம் 47 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கி வருகின்றது.
உண்மையில் அமைய ஊழியர்கள் நிரந்தரமானால் சம்பளத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
அந்த நிலை இங்கு இல்லாதது கவலை.
நான்
தவிசாளராகி இரு மாதங்களாகின்றன. இதுவரை ஒரு சதமேனும் சபை நிதியில்
எடுக்கவில்லை. முன்னாள் தேடிவைத்த நிதியை நான் செலவழிப்பதாக பொய்ப்
பிரச்சாரம் செய்தார்கள். உண்மையை உலகறியும்.என்றார்.
அதன் பின்னர் உப தவிசாளர் வி.வினோகாந்த் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கன்னி உரையாற்றினார்கள்.






Post A Comment:
0 comments so far,add yours