பாறுக் ஷிஹான்

நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி செல்வி முஹம்மட் நிஸ்பர் பாத்திமா அனாபா அவர்கள் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக இன்றையதினம் (16) கௌரவிப்பு இடம்பெற்றது.
இதன்போது அக்ஸயன் 2000 வகுப்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் AB.அக்ரம் தலைமையில் அவரின் வீடு சென்று கௌரவிக்கப்பட்டது.
குறித்த மாணவி அண்மையில் வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9A சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours