( வி.ரி.சகாதேவராஜா)
சித்தருள்சித்தர்
ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும்
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம்
தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.
அப்பாரம்பரிய
நிகழ்விற்கு முன்னோடியாக எதிர்வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9
மணிக்கு குரு பூஜை தொடர்பான சித்தர் பட்டய அறிவிப்பு ஆலய தலைவர்
சி.நந்தேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் .
சுவாமிகள் முத்து சப்புறத்தில் எதிர்வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை வீதி வலம் வருவார்.
31 ஆம் தேதி வியாழக்கிழமை காலை சித்தர் ஆலயத்தில் சமயதீட்சை வழங்கப்படவுள்ளது.
மேலும்
கோமாதா பூஜை, 210 சித்தர்களுக்கான வேள்வி,
அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை என்பன நடைபெற இருக்கின்றன.
மறுநாள் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் 74வது குரு பூஜையும் அன்னதானமும் நடந்தேறஇருக்கின்றது.



Post A Comment:
0 comments so far,add yours