அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலய மாணவி அமிர்தலிங்கம் திவிஸ்கா 9 ஏ சித்திபெற்று சாதனை நிகழ்த்தியதுடன் மற்றும் 8ஏ பி. 7ஏ 2பி. 7ஏ 2சி போன்ற பெறுபேறுகளினையும் மாணவர்கள் பெற்றுள்ளதாக அதிபர் கி.ஜெகதீசன் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு பெறுபேற்றின் அடிப்படையில் 14ஆவது இடத்தில் இருந்து 10 இடங்கள் முன்னேறி 2023 ஆம் ஆண்டு பெறுபேற்றின் அடிப்படையில் 95 சித்தி வீதத்தினைப் பெற்று வலயத்தில் 4ஆவது இடத்தினை முதற்தடவையாகப் பெற்று சாதனை படைத்திருந்தது. அதேபோன்று இவ்வாண்டு மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது வெளியாகிய 2024 க.பொ.த(சாஃத) பரீட்சை பெறுபேற்றில் 94.73 வீதம் சித்தியினைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் 2 ஆவது இடத்தினைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours