கல்விக்கு எதுவுமே தடையில்லை என்பததற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஒரு மாணவன்தான் லக்ஸ்மன் லியோன்ஷன். மட்டக்களப்பை சேர்ந்த இவர் சமீபத்தில் வௌியான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 9 ஏ சித்திகளைப் பெற்று தனது தாய், தந்தையர் மாத்திரமன்றி பாடசாலைக்கும் தமது சமூகத்திற்கும், மட்டக்களப்பிற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார். சிறுவயது முதலே அரிய வகை என்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் தனது மன உறுதியின் மூலம் இவ் பெறுபேறுகளை பெற்றுள்ளார். இவ் மாணவனின் இவ் சாதனையானது மற்றைய பிள்ளைகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். கல்வியில் திறமையான இவ் மாணவன் எதிர்காலத்தில் பல சாதனைகள் புரிந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். அவரை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்திய போது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours