( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு
மாகாண ஹொக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியான
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி 1-0 என்ற கோல்களால் வெற்றிவாகை சூடி கிழக்கு
மாகாண சாம்பியனாக மீண்டும் தெரிவாகியுள்ளது.
இதன்
மூலம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் மாகாண சம்பியனாக
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி தெரிவாகியுள்ளமை சிறப்பு பதிவாகும்.
இம் மாகாண மட்ட போட்டி நேற்றுமுன்தினம் ( ஞாயிற்றுக்கிழமை )அம்பாறை பொது மைதானத்தில் நடைபெற்றது.
முதல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியும் திருகோணமலை மாவட்ட அணியும் மோதின. அதில் திருகோணமலை அணி வெற்றி பெற்றது.
நடப்பு வருட சாம்பியனான அம்பாறை மாவட்ட அணி "பை" Bye மூலம் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இறுதிப்
போட்டியில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அணிகள் மோதியதில் அம்பாறை
மாவட்ட அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி வாகை சூடியது.


Post A Comment:
0 comments so far,add yours