சுவிஸ் உதயம்  அமைப்பின் ஏற்பாட்டில்  வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்மந்தனாவெளி கிராமத்தில்  வீடற்ற ஒரு குடும்பத்திற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச் சங்கத்தின் பொருளாளர் தொழிலதிபர் க. துரைநாயகம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 15 இலட்சம் அவரது சொந்த நிதியில்  புதிதாக வீடமைத்து கையளிக்கும் நிகழ்வு அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் துரைநாயகம் மற்றும் அவரது பாரியார் நிதிவதனி ஆகியோர் வருகைதந்து அவ்வீட்டினை கையளித்துவைத்தனர்

இந்நிகழ்வில் செயலாளர் பாவணர் அக்கரைப்பாக்கியன் பொருளாளர் ம.கருஸ்ராஜ் உபதலைவர் கணவரதராஜன் உப செயலாளர் சா.நடனசபேசன் உறுப்பினர் இ.ஜீவராஜ்  அதிபர் சுவிஸ் நாட்டைச்சேர்ந்த மரியதாஸ்தேவராஜ் குடும்பம் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours