நூருல் ஹுதா உமர்



திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (09) சிவராஜாவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது,
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில்  யூ.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் துறையின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருகின்றனையும் குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours