மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட துறைநீலாவணைக்குச்
செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் மாட்டெலும்பு மற்றும்
கோழிக்கழிவுகளை இரவுவேளைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவேளைகளிலும்
தொடர்ச்சியாக வீசிச்செல்வதனால் துர்நாற்றம்வீசுவதுடன் அவ்வீதியால்
செல்லமுடியாத அவலநிலை உருவாகியுள்ளதாக பிரயாணிகள் விசனம் தெரிவித்து வந்த
நிலையில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் துறைநீலாவணை வட்டார
உறுப்பினர் சு.இளமாறன் மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களது வேண்டுகோளை
ஏற்று பிரதேசசபைத் தவிசாளர் மே.வினோராஜ் அவர்கள் அவ்வீதிக்கு வருகைதந்து
பிரதேசசபை வாகனத்தின் மூலம் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை 07 ஆம் திகதி
திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளார்.
அதேவேளை துறைநீலாவணை பிரதான
வீதிக்கு சீ.சீ.ரி.வி கமரா பொருத்துவதுடன் கழிவுகளை வீசுபவர்களைக்
கண்டறிந்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகப் பிரதேசசபைத் தவிசாளர்
தெரிவித்ததுடன் அவ்விடத்திற்கு மருதமுனை வர்த்தக சங்கத்தின் தலைவரை
வரவழைத்து நிலைமையினை தவிசாளர் விளங்கப்படுத்தியிருந்தார் இதனை
ஏற்றுக்கொண்ட வர்த்தக சங்கத்தலைவர் அப்பிரதேச கடைகளுக்கு துண்டுப்பிரசுரம்
மூலம் தெரியப்படுத்தி இவ்விடத்தில் குப்பை கொட்டுவதனைத் தடுக்க முயற்சி
செய்வதாக உறுதியளித்தார்



Post A Comment:
0 comments so far,add yours